பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்
பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
கரூர்,
பேரூராட்சி ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கரூரில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் உமாராணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேரூராட்சியில் அனைத்து நிலை செயல் அலுவலர்களுக்கு முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் தேர்ந்தோர் பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். 2-ம் நிலை செயல் அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணையை வழங்கிட வேண்டும்.
நிதிச்சுமை
திறந்த வெளி ஒப்பந்த முறையை அமல்படுத்த வேண்டும். நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதார துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய டெங்கு தடுப்பு நடவடிக்கையை பேரூராட்சி துறையால் மேற்கொள்ளப்படு வதால் ஒவ்வொரு மாதமும் பேரூராட்சிகளில் ரூ.5 லட்சம் வரை செலவினங்கள் ஆவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே டெங்கு தடுப்பு நடவடிக்கையில் செலவிடப்பட்ட அனைத்து செலவினங்களுக்கான தொகையும் பேரூராட்சிகளுக்கு அரசு வழங்க வேண்டும். துறையில் பணியாற்றும் செயல் அலுவலர் முதல் அனைத்து பிரிவு ஊழியர்களின் நலன்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் கனகராஜ், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.