குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் அறிவுரை
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
நெல்லை,

பயிற்சி முகாம்
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில் போலீசாருக்கு, குழந்தைகள் சார்ந்த சட்டங்கள் குறித்த பயிற்சி முகாம் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், குழந்தைகள் சட்டம் சார்ந்த கையேட்டை வெளியிட்டார்.அப்போது, போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் பேசியதாவது:-
குழந்தைகள் நல காவலர்கள்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் காவல்துறை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் குழந்தைகள் நல காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குழந்தைகள் நல பாதுகாப்பு சட்டங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
83 குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை தடுக்க வேண்டும். பயிற்சி பெற்ற போலீசார் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் 83 குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 9 குழந்தைகள் காப்பகங்கள் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன. சிறார் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தேவ்ஆனந்த் வரவேற்று பேசினார். முன்னாள் அரசு வக்கீல் ஜெயபிரகாஷ், மதுரை சட்டக்கல்லூரி பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் குழந்தைகள் சட்டங்கள் குறித்து பேசினர். பயிற்சி முகாமில் சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.