காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை, கலெக்டர் பேச்சு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். விவசாயிகளிடம் இருந்து, விவசாயிகளின் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோருதல், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோருதல், டிராக்டர், உழவு கலப்பை எந்திரம், களை எடுக்கும் கருவி மானியம் வழங்க கோருதல், நிலக்கடலை பயிருக்கு சொட்டுநீர் பாசனம் வழங்க வழிவகை கோருதல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் கரும்பு பயிர் அறுவடை செய்த மகசூல் விவரம் தெரிவிக்க கோருதல் உள்பட 24 மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. அந்த வகையில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்வு காணப்படுகிறது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் நெல் வியாபாரிகளுடன் பேசி கூட்டம் நடத்தப்பட்டு அரசு நெல்கொள்முதல் விலைக்கு நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.