ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சம்பத் பேட்டி
பாடாலூரில் ஜவுளி பூங்கா அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சம்பத் கூறினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட விஜயகோபாலபுரம் பகுதியில் உள்ள எம்.ஆர்.எப். டயர் உற்பத்தி தொழிற்சாலையினை அமைச்சர் சம்பத், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது தொழிற் சாலையின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எந்திரங்களின் தன்மை ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:-
தமிழக அரசு 2019-ம் ஆண்டு நடத்தவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பன்னாட்டு நிறுவனங்கள் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.25,000 கோடி மதிப்பிலான தொழில்கள் தமிழகத்தில் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்புவோருக்கான வாய்ப்புகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏற்ற சூழ்நிலைகள் உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் ஜவுளி பூங்கா அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் சாந்தா, எம்.எல்.ஏ.க்கள் தமிழ்ச்செல்வன், ராமச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட அலுவலர்கள் உட னிருந்தனர்.