காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பு எதிரொலி:விழுப்புரம் தபால் நிலையத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகை

காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பு எதிரொலியாக விழுப்புரம் தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-17 21:30 GMT
விழுப்புரம்,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிற தீர்ப்புக்கு எதிராகவும், தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று விழுப்புரம் காமராஜர் வீதியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு அங்குள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இந்த போராட்டத்திற்கு விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிகிருஷ்ணன், செல்வக்குமார், ராஜேந்திரன், தொல்காப்பியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். உடனே விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 41 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்