பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-02-17 22:15 GMT
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை–சூலூர்பேட்டை பிரிவில் உள்ள எளாவூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடை பெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

* சூலூர்ப்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை சென்டிரலில் இருந்து சூலூர்ப்பேட்டை நோக்கி இரவு 8.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி–சூலூர்ப்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்