கொள்ளை போகும் மணல் வளம்!
மணல் கொள்ளையால் ஆறுகள் பாழாவது நம்மூர் பிரச்சினை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், மணல் சுரண்டல் ஓர் உலகளாவிய அவலம் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
பூமியில் நீருக்கு அடுத்து நாம் அதிகம் பயன்படுத்தும் இயற்கை வளம், மணல். இந்நிலையில், இந்த உலகம் மணல் பற்றாக்குறையைச் சந்திக்கும் வாய்ப்புள்ளதாக ஐ.நா. கூறுகிறது.
நீருக்கு இணையாக மணலையும் நாம் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுவதில் அர்த்தம் இருக்கிறது.
மணல் உருவாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிறது. மலைகளில் அரிக்கப்பட்ட பாறைகள், கடைசியில் மணல் திட்டுகளாகி கடற்பகுதி மற்றும் கடற் கரைகளில் போய் குவியும். மணலை கண்மூடித்தனமாகப் பயன்படுத்தும் நாம், அது எங்கிருந்து, எப்படி உருவாகிறது என்பது குறித்து சிந்தனையைச் செலுத்துவதில்லை.
பூமியில் மனித வாழ்வின் அடித்தளமாக மணல் உள்ளது. எங்கு பார்த்தாலும் பெரும் பெரும் கட்டிடங்கள் எழுந்து வரும் இன்றைய உலகில், கட்டிட வேலைகளுக்கு மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 1500 கோடி டன் மணல் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்படி நமது அளவு கடந்த மணல் தேவையால் ஆறுகள் போன்றவற்றில் இருந்து அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால் சுற்றுச்சூழலும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. மணல் அள்ளப்படும் ஆறு போன்ற நீர்நிலைப் பகுதிகள் மென்மையான சமச்சீர் சுற்றுச்சூழல் கொண்டவை. அங்கு வரைமுறையின்றி மணல் அள்ளப்படும்போது அவற்றின் சமநிலை பாதிக்கப் படுகிறது.
ஆற்றங்கரை ஓரங்களில் மணலில் உள்ள கரிமப் பொருட்கள்தான் சிறிய மீன்களின் உணவு. அந்தச் சிறிய மீன்களே பெரிய மீன்களுக்கு உணவாகின்றன.
அதிக அளவில் மணல் அள்ளுவதால், மீன்களும் மீன்வளமும் பாதிக்கப்படுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் அடியாழத்துக்குச் செல்வதாலும், ஆற்றோட்டம் பாதிக்கப்படுவதாலும் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகிறது.
தவிர, மணல் ஓர் இயற்கை பாதுகாப்பு அரணாகவும் திகழ்கிறது. உலகில் மணல் தேவை எகிறுவதால், கடற்கரை மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் மணல் அள்ளுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் மணல் வழங்கும் இயற்கை பாதுகாப்பு குறைகிறது.
மணல் இல்லாததால் கடல் அலைகளால் நிலங்கள் அரிக்கப்படுகின்றன. கடற்கரை அருகில் உள்ள வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு, அவை சேதமடைகின்றன.
கட்டுமானப் பணிகளுக்காக பல நாடுகளில் சட்டவிரோதமாக அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ள தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் சில சமூக விரோதக் குழுக்கள் சகல உத்திகளையும் பயன்படுத்தி மணல் அள்ளிவருகின்றன.
கரீபிய தீவுகள் தொடங்கி தெற்காசியா வரை இந்த நிலை நிலவுகிறது. இதே நிலை இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடருமானால், மீட்க முடியாத பாதிப்புக்கு பூமியும், அதில் வசிக்கும் நாமும் உள்ளாக நேரிடும் என்பது ஆய்வாளர்களின் கவலை கலந்த எச்சரிக்கை.
உலக மக்கள் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும்!