கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 550 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் ஜீப் மீது மோதிவிட்டு சென்ற ஆட்டோவை 2½ கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்தனர்.
புதுக்கடை,
குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க போலீசார் மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகளும், போலீசாரும் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் ஆட்டோ, சொகுசு கார், அரசு பஸ் போன்றவை மூலம் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில், மாவட்ட பறக்கும்படை தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் குமார் மற்றும் அதிகாரிகள் புதுக்கடை- மங்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக கேரளாவை நோக்கி ஒரு ஆட்டோ வேகமாக சென்றது. அந்த ஆட்டோவை நிறுத்துமாறு அதிகாரிகள் கைகாட்டினர். ஆனால், அந்த ஆட்டோ நிற்காமல், அதிகாரிகளின் ஜீப் மீது மோதிவிட்டு வேகமாக தப்பி சென்றது. இதில் அதிகாரிகள் சென்ற ஜீப் லேசாக சேதம் அடைந்தது.
தொடர்ந்து, அதிகாரிகள் ஜீப்பில், ஆட்டோவை துரத்தி சென்றனர். சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று இறுதியில் மணக்காலை பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். உடனே, ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார்.
ஆட்டோவை சோதனை செய்த போது, அதில் சிறு, சிறு மூடைகளில் 550 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து, அரிசியுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புக்காடு குடோனிலும், ஆட்டோவை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.