கிரிவலப்பாதையில் ரூ.28 கோடியில் ‘யாத்ரி நிவாஸ்’ கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.28 கோடியில் யாத்ரி நிவாஸ் கட்டும் பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவில் வைப்பு நிதியில் இருந்து ரூ.28 கோடி மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்) கட்டப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி கிரிவலப்பாதையில் சோண நதிதீர்த்தம் எதிரில் உள்ள வனப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தேர்வு செய்த இடத்தில் விளாப்படு, வில்வம், கருங்கொன்னை உள்ளிட்ட 545 மரங்களை வேருடன் அகற்றும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டு, மாற்று இடம் தேர்வு செய்யபட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்டலிங்கம் சன்னதிகளில் நிறைவாக உள்ள ஈசான்ய லிங்கம் சன்னதி அருகே, வருவாய்த்துறைக்கு சொந்தமான 3.76 ஏக்கர் நிலம் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு சிவலிங்க வடிவில் யாத்ரி நிவாஸ் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியது.
இதில் 120 அறைகளுடன் 430 பேர் தங்கும் வகையில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இது தங்கும் அறைகள், குடில்கள், உணவகம், டிரைவர்கள் தங்கும் இடம் போன்ற வசதிகளுடன் கட்டப்படுகிறது. பொதுப்பணித்துறை மூலம் கட்டும் இந்த கட்டிடம் ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் யாத்ரி நிவாஸ் கட்டுமான பணியினை கலெக் டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திட்டமிட்டப்படி இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவுப்படுத்தும் மற்றும் மேம்பாட்டு பணியினை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவர் நடைபாதை, சிறிய மேம்பாலம் கட்டும் பணி, கால்வாய் அமைக்கும் பணி போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அபய மண்டபம் அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் நடைபாதையில் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு, மரக்கன்று நடும் பணியினை தொடங்கினார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெயசீலன், உதவி கோட்ட பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், அசோகன்பாபு, உதவி பொறியாளர் பூபாலன், உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.