தூசி அருகே சாலையோரம் வேன் கவிழ்ந்து விபத்து; 18 பேர் காயம்
நிச்சயதார்த்தத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்: தூசி அருகே சாலையோரம் வேன் கவிழ்ந்து 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூசி,
தூசி அருகே உள்ள அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாஷா. இவரது மகன் அசேன் (வயது 22). இவருக்கு வந்தவாசியில் நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதில் கலந்துகொள்வதற்காக அப்துல்லாபுரம் கிராமத்தில் இருந்து ஒரு வேனில் 18 பேர் வந்தவாசிக்கு சென்றனர். பின்னர் அவர்கள், மாலையில் வீடு திரும்பினர். வேனை, பாண்டியன் என்பவர் ஓட்டினார்.
உத்தம்பெரும்பாக்கம் கூட்டுசாலை பகுதியில் வேன் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. இதனால் வேனை டிரைவரை திருப்பியுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 18 பேர் காயமடைந்தனர். இதில் ஜனத் (50), அமிதாபி (60), ஷரீப் (66), இப்ராகிம் (45) ஆகிய 4 பேர் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் வீடு திரும்பினர்.
இதுகுறித்து உக்கம்பெரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் தமிம் கொடுத்த புகாரின்பேரில் தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.