தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து தொழிலாளி பலி 11 பேருக்கு தீவிர சிகிச்சை
கல்யாண் அருகே தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு தொழிலாளி பலியானார். 11 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அம்பர்நாத்,

விஷவாயு தாக்கி பலி
தானே மாவட்டம் கல்யாண் அருகே உள்ள சாகாட்டில் சென்சுரி ரேயான் என்ற தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு விஷவாயு செல்லும் குழாயில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளிகள் அதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென அந்த குழாயில் விஷவாயு கசிவு ஏற்பட்டது.
இதில், குழாயின் அருகில் நின்ற சஞ்சய் சர்மா(வயது34) என்ற தொழிலாளி விஷ வாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல தொழிற்சாலையில் நின்று கொண்டு இருந்த 11 பேர் மயங்கி விழுந்தனர்.
தீவிர சிகிச்சை
தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தொழிற்சாலையில் மயங்கி கிடந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல பலியான சஞ்சய் சர்மாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.