சிறுமியை கற்பழித்த பெயிண்டருக்கு 10 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கற்பழித்த பெயிண்டருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து, தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-02-16 22:30 GMT
தானே,

சிறுமியை கற்பழித்த பெயிண்டருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து, தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிறுமி கற்பழிப்பு


நவிமும்பை நெருலை சேர்ந்தவர் தர்மேந்திர சாகேட் (வயது21). பெயிண்டர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வெளியே விளையாடி கொண்டிருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமியை பிஸ்கட் தருவதாக கூறி, தனது வீட்டிற்குள் அழைத்தார்.

பின்னர் அங்கு வைத்து சிறுமியை அவர் மிரட்டி கற்பழித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி வீட்டிற்கு வந்து, நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி அழுதாள்.

10 ஆண்டு ஜெயில்

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அவளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தர்மேந்திர சாகேட்டை கைது செய்து, தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில் தர்மேந்திர சாகேட் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குற்றவாளி தர்மேந்திர சாகேட்டுக்கு நீதிபதி 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்