அம்மா திட்ட முகாம்

கெரகோடஅள்ளி, குறிஞ்சிபுரம் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

Update: 2018-02-16 23:15 GMT
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கெரகோடஅள்ளி கிராமத்தில் அம்மா திட்டம் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். காரிமங்கலம் தாசில்தார் ரேவதி முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அதிகாரி வள்ளி வரவேற்று பேசினார்.

இதில் ஸ்மார்ட் கார்டு, பட்டா, சிட்டாவில் பெயர் மாற்றம், வாரிசு சான்று, விதவை சான்று, முதியோர் உதவித்தொகை, சிறுவிவசாயி சான்று, வருமானச்சான்று, இலவச வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு குறைகள் தொடர்பாக 25 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதில் 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

இந்த முகாமில் காரிமங்கலம் வருவாய் ஆய்வாளர் சக்திவேல், கெரகோடஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதன், முக்குளம் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், பொம்மஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், அடிலம் கிராம நிர்வாக அலுவலர் கதிரவன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், தோட்டக்கலைத்துறை ஊழியர்கள், வருவாய் துறை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி அடுத்த பங்குநத்தம் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சிபுரம் கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை தாங்கி, பொதுமக்களிட மிருந்து பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவி தொகை, குடிநீர் வழங்குதல், தெருவிளக்குகள் அமைக்கப்படுதல், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 31 பயனாளிகளுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் பட்டா மாறுதலுக்கான ஆணைகளை, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் வழங்கினார்.

இதில் தாசில்தார் பழனியம்மாள், தனிதாசில்தார் கேசவமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் பிரசன்னமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





மேலும் செய்திகள்