கடன் கொடுக்க மறுத்ததால் என்ஜினீயரிங் மாணவர் படுகொலை: நண்பருக்கு கத்திக்குத்து
கடன் கொடுக்க மறுத்ததால் என்ஜினீயரிங் மாணவர் படுகொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த நண்பருக்கு கத்திக்குத்து விழுந்தது.
துடியலூர்,
கோவையை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் விஜயலிங்கம். இவருடைய மகன் பார்த்திபன் (வயது 25). இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக் கொண்டு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கோவையை அடுத்த வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மகன் பிரவீன்குமார் (வயது 21). இவர் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வருகிறார். பாண்டியன் என்பவரின் மகன் அஜித்குமார் (20). இவர் மீன் கடையில் வேலை செய்து வருகிறார். பிரவீன்குமார், அஜித்குமார் ஆகிய 2 பேரும் பார்த்திபனின் நண்பர்கள் ஆவர். இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அஜித்குமார் தனது இருசக்கர வாகனத்துக்கு பணம் கட்ட வேண்டும் என பார்த்தி பனிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மது அருந்திவிட்டு துடியலூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் பார்த்திபனை குத்தி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனே அஜித்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
படுகாயம் அடைந்த பார்த்திபன், பிரவீன்குமார் ஆகிய 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன் இறந்தார். பிரவீன்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த தகவலின் பேரில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரவீன்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அஜித்குமாரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.