திருவள்ளூரில் மோட்டார் சைக்கிளை வாலிபர் திருடி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு
திருவள்ளூர் இந்திராநகர் சேர்ந்தவர் குப்பன்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் ஜெயநகர் சேலை ரோடு, இந்திராநகர் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் வாசுதேவன் (வயது 32). இவர் திருவள்ளூர் ஜே.என்.சாலையில் பிரிண்டிங் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வாசுதேவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கினார். அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வாசுதேவன் தனது மோட்டார் சைக்கிளை கடையின் வெளியே நிறுத்திவிட்டு சென்றார். மாலையில் அவர் வெளியே செல்வதற்காக வந்து பார்த்தபோது கடையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர் ஒருவர் திருடி சென்றுவிட்டார்.
அவர் உடனடியாக தனது கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் தலையில் தொப்பி அணிந்து வந்த ஒருவர் 2 முறை அவரது மோட்டார் சைக்கிள் அருகே வந்துபோனதும், பின்னர் அந்த நபர் மோட்டார் சைக்கிள் வயரை துண்டித்துவிட்டு மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற காட்சிகள் பதிவானது தெரிந்தது. இதுகுறித்து வாசுதேவன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.