கூடுவாஞ்சேரியில் ஆபத்தான நிலையில் தரைப்பாலம்: பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கூடுவாஞ்சேரியில் ஆபத்தான நிலையில் தரைப்பாலம் உள்ளது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள உதயசூரியன் நகரின் பிரதான சாலையில் இருந்து கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையை இணைக்கும் இடத்தில் ஒரு தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் இடிந்து காணப்படுகிறது. ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து உதயசூரியன் நகர் பகுதிக்கு செல்லும் சாலை சில மாதங்களுக்கு முன்னர்தான் தார் சாலையாக அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-
உதயசூரியன் நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் போது பேரூராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இருந்தால், மோசமான நிலையில் இருக்கும் இந்த தரைப்பாலத்தை சீரமைத்த பிறகு சாலை போட்டு இருப்பார்கள்.
ஆனால் பேரூராட்சி பகுதியில் இதுபோன்ற முக்கிய இடங்களில் சாலை, அமைக்கும் போது அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வது கிடையாது. தற்போது இந்த நகர் பகுதியில் உள்ள மக்கள் சாலை வழியாக செல்லும் போது வாகனங்களை அச்சத்துடன் ஓட்டி செல்கின்றனர். மழை காலங்களில் நிச்சயமாக இந்த தரைப்பாலம் இடிந்து விழுந்து விடும், அப்போது இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்படும் நிலை உருவாகும்.
எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.