சித்தராமையா தேர்தல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் எடியூரப்பா கருத்து
சித்தராமையா தேர்தல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக எடியூரப்பா கருத்து தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு,
சித்தராமையா தேர்தல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக எடியூரப்பா கருத்து தெரிவித்து உள்ளார்.
கர்நாடக பட்ஜெட் குறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேர்தல் பட்ஜெட்
ஏற்கனவே எதிர்பார்த்தது போல் சித்தராமையா தேர்தல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். நிதி ஒழுங்குமுறையை சித்தராமையா பராமரிக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு கர்நாடகத்தில் புதிய அரசு அமையும். அப்போது புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தலை மனதில் வைத்து அனைத்து தரப்பு மக்களின் ஓட்டுகளையும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சித்தராமையா இந்த பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளன. இந்த பட்ஜெட் அமல்படுத்தப்படுமா? என்பது பற்றி பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வேண்டுமானால் சித்தராமையா முழு பட்டை தாக்கல் செய்து இருக்கலாம். நிறைவேற்ற முடியாத திட்டங்களை சித்தராமையா அறிவித்து உள்ளார்.
செயல்பாட்டுக்கு வராது
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 50 சதவீதம் கூட அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற முடியுமா?. சித்தராமையாவின் அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இருக்கும். இது செயல்பாட்டுக்கு வராது.
மத்தியில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பெரிய சரிவுக்கு சென்றது. அதே போன்ற ஒரு நிலையை தான் கர்நாடகத்தில் சித்தராமையா ஏற்படுத்துகிறார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.