மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, 312 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.;
நாமக்கல்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாவட்ட வாரியாக மாற்றுத்திறனாளிகளிடையே, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, 312 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார். முகாமில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) துரை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி செய்திருந்தார்.