நெய்வாசல் கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம்
நெய்வாசல் கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. தொடர்ந்து இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருமயம்,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில் திட்டாணி அய்யனார்- கருப்பர் கோவி லில் மகா சிவராத்திரி திருவிழா நடந்தது. இதையொட்டி நெய்வாசல் கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேவகோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 29 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டனர். பந்தயம் பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவாக நடந்தது.
இதில் பெரிய மாடு பந்தயத்தில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் விராமதியை சேர்ந்த சந்திரன் மாடும், 2-பரிசை ச.கோட்டை கோதையம்மாள் மாடும், 3-வது பரிசை புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல் மணிதேவர் மாடும், 4-வது பரிசை தேவகோட்டை சரவணன் செட்டியார் மாடும் பெற்றன.
சிறிய மாடு பந்தயத்தில் முதல் பரிசை மதுரை மாவட்டம் மேலூர் பெருமாள் மாடும், 2-வது பரிசை மதுரை ஐந்து கோவிலை சேர்ந்த பார்த்திபன் மாடும், 3-வது பரிசை சிவகங்கை மாவட்டம் விராமதி தையல்நாயகி மாடும், 4-வது பரிசை புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி இந்திரா மாடும் பெற்றன. பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர் களுக்கு பரிசு வழங்கப் பட்டது.