பள்ளி பொதுத்தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி பொதுத்தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடந்தது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பொதுத்தேர்வுகள் நடை பெறும் நாட்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் மற்றும் தேர்வு மையங்களுக்கும் தேவையான வசதிகளை செய்யவும், மேலும் தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் அனைத்து அலு வலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத்துறை, சுகாதாரத்துறை, ஊர்காவல்படை மற்றும் நகராட்சி ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.