குறைந்த எண்ணிக்கையில் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு இல்லை
தேனி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மின்வாரிய ஊழியர்களே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
தேனி
தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள், ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கப்போவதாக அறிவித்தனர். சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன.
அதன்படி நேற்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கியது. தேனி மாவட்டத்தில் 1,175 மின்வாரிய ஊழியர்கள் உள்ளனர். இதில் 211 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் குறைந்த எண்ணிக்கையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மின்வாரிய பணிகளில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மின்கட்டணம் செலுத்தும் மையங்களில் நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் இருந்தனர்.
தேனி-மதுரை சாலையில் மின்கம்பிகள் மாற்றி அமைக்கும் பணியில் ஊழியர்கள் நேற்று வழக்கம் போல் ஈடுபட்டனர். அதே நேரத்தில் மேலும் சில தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் குதிக்க ஆயத்தம் ஆகி இருப்பதாக கூறப்படுவதால் அடுத்தடுத்த நாட்களில் போராட்டம் தீவிரம் அடைந்து, பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.