சுரண்டை அருகே பஸ்சில் ஏறுவதில் பிரச்சினை: கும்பல் தாக்கியதில் 3 கல்லூரி மாணவர்கள் காயம் தந்தை-மகன் உள்பட 3பேர் கைது
சுரண்டை அருகே, பஸ்சில் ஏறுவதில் பிரச்சினை ஏற்பட்டதில் 7 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் 3 கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர்.;
சுரண்டை,
சுரண்டை அருகே, பஸ்சில் ஏறுவதில் பிரச்சினை ஏற்பட்டதில் 7 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் 3 கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர். இது தொடர்பாக, தந்தை-மகன் உள்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவர்கள்
பாவூர்சத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி பிள்ளையார் தெருவை சேர்ந்த திருமலை கொழுந்து மகன் அரவிந்த் (வயது19). இவரும், கீழப்பாவூர் வடக்கு தெரு முத்துசாமி மகன் லட்சுமணன், ஆவுடையானூரை சேர்ந்த பால்பாண்டி மகன் ராஜேஷ் ஆகியோரும் நண்பர்கள். இந்த 3பேரும் சுரண்டையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர்.
நேற்று காலையில் பாவூர்சத்திரத்தில் இருந்து 3பேரும் கல்லூரிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். பஸ்சில் கூட்ட நெரிசலாக இருந்தது. இதனால், இந்த 3 பேரும் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்தனர்.
துவரங்காடு விலக்கில் அந்த பஸ்சில் துவரங்காடு அம்மன் கோவில் தெரு மாரிச்சாமி மகன் மனோகர், தங்கத்துரை(49), அவருடைய மகன் வெனிஸ்குமார்(18) உள்பட 7 பேர் ஏறினர். கூட்ட நெரிசலாக இருந்ததால், பஸ்சிற்குள் ஏறி செல்வதில் அரவிந்த் உள்ளிட்ட 3பேருக்கும், அந்த 7பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென்று அந்த 7பேரும் சேர்ந்து அரவிந்த் உள்ளிட்ட 3பேரையும் அடித்து உதைத்தனர். இதில், 3 பேரும் காயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதனால், பஸ்சை சுரண்டை போலீஸ் நிலையத்துக்கு பஸ் ஊழியர்கள் கொண்டு சென்றனர். அங்கு மோதலில் ஈடுபட்ட 10பேரையும் இறக்கி விட்டு விட்டு பஸ் புறப்பட்டு சென்றது. காயமடைந்த கல்லூரி மாணவர்கள் 3பேரும், சுரண்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். லேசான காயம் அடைந்திருந்த லட்சுமணன், ராஜேஷ் ஆகியோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். பலத்த காயங்களுடன் அரவிந்த் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து சுரண்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சபிதா வழக்குப்பதிவு செய்து தங்கத்துரை, அவருடைய மகன் வெனிஸ்குமார், மனோகர் ஆகிய 3பேரையும் கைது செய்தார். அவர்களுடைய கூட்டாளிகளான மற்ற 4 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
கைதான வெனிஸ்குமார், மனோகர் ஆகிய 2 பேரும் ஐ.டி.ஐ. மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.