சங்கரன்கோவிலில் துணிகரம்: எல்.ஐ.சி. முகவர் அலுவலகத்தில் ரூ.1.60 லட்சம் பொருட்கள் கொள்ளை
சங்கரன்கோவிலில் எல்.ஐ.சி. முகவர் அலுவலகத்தில் ரூ.1.60 லட்சம் பொருட்கள் கொள்ளை போனது.;
சங்கரன்கோவில், \
சங்கரன்கோவிலில் எல்.ஐ.சி. முகவர் அலுவலகத்தில் ரூ.1.60 லட்சம் பொருட்கள் கொள்ளை போனது. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எல்.ஐ.சி. முகவர்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கோமதிநகர் காலனியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் எல்.ஐ.சி. மற்றும் அஞ்சலக முகவராக இருந்து வருகிறார். இவர் திருவேங்கடம் சாலையில் அலுவலகம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் சென்று பார்க்கும் போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கொள்ளை
தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலுவலகத்தை பார்வையிட்டனர். அப்போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, அலுவலகத்தின் உள்ளே இருந்த 3 மடிக்கணினிகள் மற்றும் ஹார்டு டிஸ்க், மேஜை டிராயரில் இருந்த ரூ.14 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் மர்ம நபர்கள், அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து அதன் ஹார்டு டிஸ்க்கையும் தீவைத்து எரித்து விட்டு சென்று விட்டனர். கடையில் வைத்திருந்த அஞ்சலக பாஸ் புத்தகங்கள், வங்கி செக்குகளையும் கொள்ளையர்கள் தீ வைத்து எரித்து விட்டனர். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் ஆகும்.
போலீசார் வலைவீச்சு
இதுகுறித்து கல்யாணசுந்தரம் அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அலுவலகத்தில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.