திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வகுப்புகள்
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய 22-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திறன் பயிற்சி வகுப்புகள்
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஏழை, எளிய மாணவர்களின் கல்வி தகுதியை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதில் ஒரு படி மேலாக பள்ளி படிப்பை முடித்த, முடிக்காத ஏழைகளுக்காக மற்றொரு பாதையை உருவாக்கி தரும் பொருட்டு திறன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
இந்திய அரசாங்கம் வேலையின்மையை போக்கும் வகையில் பல்வேறு மனித திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பல திட்டங்களின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்த பயிற்சியின் மூலமாக இந்திய மனித வளத்தை உலக தரத்துக்கு மேம்படுத்த தொலைநோக்கு திட்டங்களையும் செயல்படுத்துகிறது.
திறமையான நபர்கள்
குறிப்பாக ஆரம்பகல்வி, உயர்கல்வி தகுதிகளோடு, படிப்பை தொடர முடியாமல், வேலைவாய்ப்பு இன்மையால் தங்களது பொருளாதாரம் தேடும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி வகுப்புகளை இந்திய அரசாங்கம் தனது திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நடத்துகிறது.
குறிப்பாக இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் ஆய்வின்படி 2022-ம் ஆண்டு 109 மில்லியன் திறமையான நபர்கள் தேவைப்படுவார்கள். இந்த தேவையை பூர்த்தி செய்ய பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திறன் சார்ந்த பயிற்சி வகுப்புகள் திட்டம் தொடங்கப்பட்டது.
வயது வரம்பு இல்லை
இந்த திட்டத்துக்கு தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த வகுப்புகள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். இந்த பயிற்சி பெற வயது வரம்பு தகுதி எதுவும் இல்லை.
இந்த திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட பயிற்சி வகுப்புகளும், அதற்கான அடிப்படை தகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
1.கட்டுமான துறையில் உதவி நிலம் அளப்பவர், கல்வி தகுதியானது 5-ம் வகுப்பு.
2.சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பிரிவில் ‘கவுன்டர் சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவ்’. அடிப்படை தகுதி- 12 ம் வகுப்பு.
3.உணவு மற்றும் குளிர்பானம் சேவை பயிற்சி. அடிப்படை தகுதி 8-ம் வகுப்பு.
4.தகவல் தொழில்நுட்ப பிரிவில் தகவல் அச்சு உதவியாளர். அடிப்படை தகுதி 10-ம் வகுப்பு.
5. மின்னணு துறையில் செட்டாப் பாக்ஸ் அமைத்தல். அடிப்படை தகுதி 8-ம் வகுப்பு.
6.மின்னணு துறையில் எல்.இ.டி. மின்விளக்கு பழுது பார்த்தல். 10 மற்றும் 12-ம் வகுப்பு.
7.வாகன துறையில் லேத் ஆபரேட்டர். அடிப்படை தகுதி 8-ம் வகுப்பு.
இட ஒதுக்கீடு அடிப்படையில்...
மேற்கண்ட தகுதிகள் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த வகுப்புகள் முற்றிலும் இலவசமாக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கற்று கொடுக்கப்படும். பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே, மேற்கூறிய அடிப்படை தகுதிகள் உள்ளவர்களும், ஆர்வம் உள்ளவர்களும் தங்களது பெயர், முகவரி மற்றும் கல்விதகுதி போன்ற விவரங்களை drsacoe@aei.edu.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி தங்கள் பதிவை உறுதி செய்து கொள்ளலாம். பதிவு செய்ய வேண்டிய கடைசிநாள் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) ஆகும்.
இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஞா.ஒய்ஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.