ஏழைகள் நலத்திட்டம் ஏற்றம் பெறுமா?
இந்தியா சுதந்திரம் அடைந்த போது 65 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 22 சதவீதமாக குறைந்து உள்ளது.
வளர்ச்சியான ஒரு அம்சம் இது என்றாலும், உலக அளவில் வறுமைக்கோடு பட்டியலில் இந்தியா தான் இன்னும் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் உள்ள நைஜீரியாவில் கூட 8 கோடி பேர் தான் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். ஆனால் இந்தியாவில் 22 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர்.
இந்தியாவில் 8 மாநிலங்களில் 30 சதவீதத்திற்கு மேல் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 39.93 சதவீதம், ஜார்க்கண்ட் 36.96, மணிப்பூர் 36.89, அருணாசல பிரதேசம் 34.67, பீகார் 33.74, ஒடிசா 32.59, அசாம் 31.98, மத்திய பிரதேசம் 31.65 சதவீதம் என வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். அதில் தமிழகத்தை பொறுத்தவரை 11.28 சதவீதத்துடன் 10-வது இடத்தில் உள்ளது. குறைந்தபட்சமாக கோவாவில் 5.09, கேரளாவில் 7.05, இமாச்சல பிரதேசத்தில் 8.06 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு அரசின் கடமையாகும். ஒரு தாய்க்கு தான் பெற்ற குழந்தைகள் அனைத்தும் சரிசமம் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதுவே தன்னுடைய குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் அந்த குழந்தைக்கு கூடுதல் ஊட்டச்சத்து கொடுத்து வளர்க்க வேண்டியதும் தாயின் கடமை. அதில் சமத்துவம் பேசுவது எல்லாம் வேலைக்கு ஆகாது.
இது போல தான் ஒரு அரசும் நடக்க வேண்டும். அதில் ஊட்டச்சத்து என்பது இலவசமாகவும் இருக்கலாம் அல்லது சலுகைகளாகவும் இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் வழங்கப்படும் சில சலுகைகள் ஏழைகளை மேலும் ஏழைகளாகவும், வசதியானவர்களை மேலும் வசதியானவர்களாகவும் ஆக்குகிறது. இதற்கு பலவிஷயங்களை பட்டியலிடலாம்.
செல்போனில் ஏழைகள் ரூ.50, ரூ.100 என குறைந்த மதிப்பில் ரீசார்ஜ் செய்தால், அதற்கு முழு டாக்டைம் கிடையாது. ஆனால் ரூ.200-க்கு மேல் வசதியானவர்கள் செய்யும் ரீசார்ஜ்களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறார்கள். அதே போல் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கள் பணப்பரிமாற்றத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மாற்றுக்கிளைகளில் பணம் செலுத்தினாலோ, எடுத்தாலோ கட்டணம். ஏ.டி.எம்.களில் ரூ.100 எடுத்தால் கூட ரூ.20 கட்டணம். அதுவே, வசதியானவர்கள் வைத்திருக்கும் சில கணக்குகளில் எந்த கட்டுப்பாடும் மேலும் கடைகளில் கூட குறைந்த அளவில் பொருட்கள் வாங்கும் ஏழைகளுக்கு எந்த சலுகையும் கிடையாது. அதிக பொருட்கள் வாங்கும், வசதியானவர்களுக்கு அதிக சலுகை வழங்கப்படுகிறது. இது பொருட்கள் விற்பனைக்கான உத்தி என்றாலும், அதன் பலன் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை என்பது வருத்தமான விஷயம். உதாரணத்திற்கு ஒரு பாக்கெட் பிஸ்கெட் ரூ.20 என்றால் அதுவே 3 பாக்கெட்டாக வாங்கினால் ரூ.50-க்கு சலுகை விலையில் தரப்படுகிறது. அதாவது 3 பாக்கெட்டாக வாங்கும் வசதியானவர்களுக்கு ஒரு பாக்கெட்டின் விலை ரூ.16.66-க்கும், ஒரு பாக்கெட்டாக வாங்கும் ஏழைகளுக்கு ரூ.20-க்கும் கிடைக்கிறது.
இதுஒருபுறம் இருக்க, அரசு வழங்கும் இலவசத்திற்கும் வேட்டு வைக்க வேண்டும் என்ற குரல் தற்போது அதிக அளவில் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கு அரசின் நிதி நிலைமை சரியில்லை என்ற காரணமும் சொல்லப்படுகிறது. பெற்றெடுத்த குழந்தைகளுக்கு சோறு போட வேண்டியது தந்தையின் கடமை என்கிறோம். தந்தையால் சம்பாதிக்க இயலவில்லை. கடன் வாங்கி பிள்ளைக்கு சோறு போட்டால் அது தந்தையின் தவறா? அந்த உணவை சாப்பிடும் குழந்தையின் தவறா?. அது போல தான் அரசும். சம்பாதிக்க இயலாமல் போவது அரசின் தவறு தானே தவிர, இலவசத்தை எதிர்பார்க்கும் ஏழைகளின் தவறல்ல. ஏழைகளுக்கு மட்டும் இலவசம் வழங்கினால், அரசின் நிதிக்கு பாதிப்பு இருக்காது.
ஏழையின் வாழ்வாதாரம் உயரக்கூடிய பொருட்களை நிச்சயமாக அவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். டி.வி. இருப்பவர்களுக்கு மீண்டும் டி.வி. மிக்சி-கிரைண்டர் இருப்பவர்களுக்கு மீண்டும் மிக்சி-கிரைண்டர் என அந்த பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் இலவசமாக வழங்குவது தான் தவறு. இல்லாதவர்கள் மற்றும் இயலாதவர்களுக்கு இலவசம் வழங்கப்பட வேண்டும். அது நிறுத்தப்படக் கூடாது. மேலும் ஏழைகளுக்கு தரமான கல்வியும், மருத்துவமும் கிடைப்பதை அரசு தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும். இவையும் ஏழைகளின் வாழ்க்கையை மேம்பட வழிவகைசெய்யும். ஏழைகளுக்கானநலத் திட்டம் ஏற்றம் பெற வேண்டும். இதில் பின்னடைவு ஏற்பட்டால் ஏழைகள், ஏழைகளாகத் தான் இருப்பார்கள். இந்தியாவின் வல்லரசு கனவும், வெறும் கனவாகவே போகும்.
-தூங்காநகரத்தான்