அந்தரத்தில் சறுக்கு பாலம்..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 73 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் உச்சியில் கண்ணாடி சறுக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2018-02-16 06:00 GMT
கண்ணாடி சறுக்கு கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டிடத்தின் 70–வது மாடியில் இருந்து 69–வது மாடிக்கு படிக்கட்டு வழியாக இறங்க நினைப்பவர்கள், இந்தக் கண்ணாடி சறுக்கில் சறுக்கியபடி இறங்கலாம். கட்டிடத்தின் வெளிப்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இந்த பிரமாண்ட சறுக்கை வலுவான கண்ணாடிகளால் வடிவமைத்திருக்கிறார்கள். அப்போதுதான் புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி நிற்குமாம்.

# அவ்வளவு உயரத்தில் சறுக்கி என்னங்க சாதிக்கப்போறோம்?

மேலும் செய்திகள்