தோல்விக்கு ஒரு திருவிழா

உலகமெங்கும் வெற்றியைக் கொண்டாடுவார்கள். ஆனால் ஸ்காட்லாந்தில் உள்ள பெட்டஸ் கல்லூரி மாணவர்கள், தோல்வியைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

Update: 2018-02-16 05:45 GMT
தோல்வியை ஒரு வார திருவிழாவாக அதை அமர்க்களப்படுத்துகிறார்கள். படிப்பு, விளையாட்டு, வேலைவாய்ப்பு, வாழ்க்கை என தோல்விகளால் மாணவர்கள் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே, தோல்வியை வரவேற்கும் இந்த விழா நடத்தப்படுகிறது.

‘இந்தத் திருவிழாவில் படிப்பாளிகள், சுமாராக படிக்கும் மாணவர்கள், தேர்வுகளில் தோற்றவர்கள் என எல்லா மாணவர்களுமே கலந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் வெற்றியாளருக்கும், தோல்வியாளருக்குமான இடைவெளியை குறைக்க முடியும். அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபத்தையும், ஏளனப் பார்வையையும் போக்க முடியும்’ என்கிறார்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

இந்தத் தோல்வி திருவிழாவில் தன்னம்பிக்கையை விதைக்கும் சொற்பொழிவுகள், தோல்வியில் இருந்து மீண்டு வந்த வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், தொழிலதிபர்களின் தோல்வி கதைகள் என பல வி‌ஷயங்களை சுவாரசியமாக வழங்குகிறார்கள். ‘‘நூற்றுக்கணக்கான தோல்விக்குப் பிறகே ஒரு வெற்றி கிடைக்கும்’’ என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்து, தோல்வியடைந்த மாணவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

# காதலர் தினத்தை விட, தேவையான கொண்டாட்டம் தான்.

மேலும் செய்திகள்