இளவரசியாக வாழ்ந்த இளம்பெண்..!

26 வயதான ரெபேக்கா, அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்றில் மூத்த பத்திரிகையாளராக பணிபுரிகிறார். இவருக்கு இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனை பற்றி ஆய்வு செய்ய ஆசையாம்.

Update: 2018-02-16 05:30 GMT
 இளவரசி எப்படி வாழ்கிறார்?, என்னென்ன பயிற்சிகளில் ஈடுபடுகிறார்?, எப்படி நடந்து கொள்கிறார்? போன்ற வி‌ஷயங்களை தெரிந்துக்கொண்டு ஒரு ஆய்வு கட்டுரை எழுத ஆசைப்பட்டவர், திடீரென இங்கிலாந்தின் இளவரசியாகவே மாறியிருக்கிறார்.

ஆம், ரெபேக்காவின் ஆசையை கேள்விபட்ட கேட் மிடில்டன், ரெபேக்காவை தன்னுடைய அரண்மனைக்கு அழைத்திருக்கிறார், அதுமட்டுமா..? ஒருவாரத்திற்கு அரண்மனையில் தங்கியிருந்து, இளவரசியின் வாழ்க்கை முறைகளையும், வேலைகளையும் கவனிக்க சொல்லியிருக்கிறார். கூடவே, இளவரசியின் அந்தஸ்தையும் வழங்கி, ஒரு வார இளவரசியாக பெருமைப்படுத்தியிருக்கிறார். அதனால் ரெபேக்கா படுபிசியாகி விட்டாராம். இதுபற்றி ஒருவார இளவரசி ரெபேக்கா சொல்கிறார்...

‘‘இளவரசி வாழ்க்கையின் முதல் நாளிலேயே சோர்ந்து விட்டேன். ஏனெனில் கேட் மிடில்டன் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் என்னை கிறங்கடித்து விட்டன. அவரது உடற் பயிற்சிகளுக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. அடுத்ததாக பொது வாழ்வில்  எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அங்கு ஒரு இளவரசி எப்படிப் பேச வேண்டும், எத்தகைய உடைகள், அலங்காரங்களில் தோன்ற வேண்டும், பொது இடங்களில் எப்படி உட்கார வேண்டும், உள்ளாடை தெரியாமல் நடந்து கொள்ளும் விதம் போன்றவற்றை கற்றுக் கொடுத்தனர். அத்துடன் தற்காப்பு, ஆயுத பயிற்சி, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் பயிற்சி, நகைகளை கவனித்து கொள்ளும் முறை, கார்களில் ஏறி இறங்குவது எப்படி என வாரம் முழுவதும் என்னை பாடாய்படுத்தி விட்டனர்’’ என்று கதறும் ரெபேக்கா, ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் இளவரசியின் பின்புலத்தில் இத்தனை பயிற்சிகள் இருக்கிறதா..? என்று மெய்சிலிர்க்கிறார்.

# உங்களுக்கு டிரம்ப், மெலினாவைப் போல வாழ ஆசை இல்லையா?

மேலும் செய்திகள்