ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அமைச்சர் ஆய்வு
அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் வருகிற 18-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்காக அலகுமலையில் 20 ஏக்கர் நிலம் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் வாடிவாசல் அமைப்பதற்கான கால்கோள் விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் சூடுபிடித்தது. முதற்கட்டமாக வாடிவாசல் மற்றும் முக்கிய விருந்தினர்கள் உள்பட பார்வையாளர்கள் அமர்வதற்கான கேலரிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கேலரி அமைக்கும் பணி சுமார் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதுபோல் ஜல்லிக்கட்டு காளைகள் பார்வையாளர்கள் பகுதிக்கு வராமல் இருக்கவும் உயரமான மர கம்புகள் நடும் பணியும் நடைபெற்று வருகிறது. போட்டியில் கலந்துகொள்ளும் ஜல்லிக்கட்டு காளைகள் போட்டி மைதானத்திற்கு வருவதற்கு முன்பாக கட்டி வைத்து பாதுகாக்கவும் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்துதான் காளைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னர் வாடிவாசலுக்கு கொண்டு வரப்படும். இதற்காக சுமார் 70 பேர் கொண்ட கால்நடை மருத்துவர்கள் குழுவினர் தயாராக உள்ளனர். போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் கொண்ட குழுவும், ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அலகுமலை ஈஸ்வரன் கோவில் பகுதியில் இருந்து வரும் பார்வையாளர்கள் வாடிவாசலின் வலது பக்கமாகவும், திருப்பூர் பகுதியில் இருந்து வரும் பார்வையாளர்கள் வாடிவாசலின் இடது புறமாகவும் வந்து கேலரியில் அமர்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பார்வையாளர்கள் அனைவருக்கும் தேவையான குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்த ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு சற்று தொலைவில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக தங்ககாசு, சில்வர் குடம், ஸ்கூட்டர், சேர், பீரோ, செல்போன் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மற்ற இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வழங்கப்பட்டதை விட விலை உயர்ந்த பொருட்கள் அலகுமலை ஜல்லிக்கட்டில் வழங்கப்பட உள்ளதால் மாடுபிடி வீரர்கள் அதிக ஆர்வத்துடன் வந்து கலந்துகொள்ள முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் நடராஜன், கே.என்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பொங்கலூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவாசலம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா, இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் கவுரவ தலைவர் சின்ன கவுண்டர், தலைவர் பழனிசாமி, செயலாளர் நல்லாக்கவுண்டர், பொருளாளர் எம்.எஸ்.சுப்பிரமணியம், துணைத்தலைவர் மூர்த்தி, இணைச்செயலாளர் சத்தியமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் எம்.கே.சுப்பிரமணியம,் அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் உடனிருந்தனர்.