பெயிண்டருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெயிண்டருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-02-16 00:00 GMT
சேலம்,

சேலம் கொண்டலாம்பட்டி புத்தூரை சேர்ந்தவர் பசுவலிங்கம் (வயது 48). பெயி ண்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரின் அண்ணன் மாய மாகி விட்டார். அவரை காணவில்லை என்பதால், அப்பகுதியில் தேடி அலைந்தார். அப்போது பசுவலிங்கம், அச்சிறுமியிடம் நைசாக விசாரித்தார். அச்சிறுமி தனது அண்ணனை கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும், அவரை தேடி அலைவதாகவும் தெரிவித்தார். அதைகேட்ட பசுவலிங்கம், உனது அண்ணன் எனது வீட்டில்தான் உள்ளார் என்று நைசாக பேசி அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அச்சிறுமியை வலுக் கட்டாயமாக பசுவலிங்கம் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதை வெளி யில் சொன்னால் உன்னையும், உன் அண்ணனையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இது போல 4 தடவைக்கு மேல் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் 9 மாதம் கழித்து அச்சிறுமி நிறைமாத கர்ப்பிணி ஆனதும் பெற்றோர் விசாரித்தனர். அதன் பின்னர் அச்சிறுமி நடந்த சம்பவத்தை சொல்லி கதறி அழுதார். இது குறித்து அப்போதைய கொண் டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசில்(தற்போது மல்லூர் அனைத்து மகளிர் போலீஸ்) பெற்றோர் தரப்பில் கடந்த 24.1.2012 அன்று புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுவலிங்கத்தை கைது செய்தனர். இவர் மீதான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் அச்சிறுமிக்கு, போலீசில் புகார் கொடுத்த மறுநாளே அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பசுவலிங்கம் மீதான கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்