டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ரூ.1½ லட்சம் கொள்ளை
திண்டுக்கல்லில், டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் பாறைமேட்டு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சங்கிலி (வயது 39). இவர் சுள்ளெரும்பு அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் செம்பட்டி அருகே காமுபிள்ளைசத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளர் விடுமுறையில் சென்றதால், அங்கு ஒருநாள் மட்டும் சங்கிலி பணியாற்றினார்.
இந்த கடையின் மற்றொரு விற்பனையாளராக குமரேசனும், பார் உதவியாளராக பழனிச்சாமியும் வேலை பார்த்து வருகின்றனர். பணிமுடிந்ததும் இரவு மதுபானம் விற்பனை செய்த பணத்தை வீட்டுக்கு எடுத்து சென்று மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படி, சங்கிலி நேற்று முன்தினம் இரவு மதுபானம் விற்பனை செய்த ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார்.
இதேபோல குமரேசனும், பழனிசாமியும் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். திண்டுக்கல்லில், வத்தலக்குண்டு சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே சங்கிலி வந்தபோது, சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மர்ம கும்பல் இரும்பு கம்பியால் அவரை பலமாக தாக்கியது. இதில் நிலைதடுமாறி சாலையோரத்தில் விழுந்த அவர் படுகாயம் அடைந்தார்.
உடனே அவர்கள் சங்கிலி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே பின்னால் வந்த குமரேசனும், பழனிச்சாமியும் சாலையோரத்தில் படுகாயத்துடன் கிடந்த சங்கிலியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து, தாலுகா போலீஸ் நிலையத்தில் சங்கிலி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசிதேடி வருகின்றனர்.