பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 92 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் மற்றும் சமையலர், உதவியாளர், அமைப்பாளர் ஆகியோருக்கு தகுதியின் பேரில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 15–ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அந்த வகையில் கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் திரளானோர் நேற்று காலை கரூர் தாலுகா அலுவலகம் அருகே திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழயர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் டவுன் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 பெண்கள் உள்பட 92 பேரை கைது செய்து வேனில் ஏற்றி கரூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.