ஏரியில் மண் அள்ளப்பட்டால் போராட்டம் நடைபெறும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
நெல்லிக்குப்பம் அருகே உள்ள ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளப்பட்டால் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று ஏரியை பார்வையிட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சிப்காட் (ராணிப் பேட்டை),
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த நெல்லிக்குப்பம் அருகே உள்ள சிப்காட் பகுதி 3-ல் ரவணஜோதி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் அனுமதியின்றி நேற்று முன்தினம் லாரிகளில் மண் எடுக்க சிலர் முயற்சித்தனர். இதை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அந்த ஏரியை முன்னாள் அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கும், கிராம மக்களுக்கும் இது போன்ற ஏரிகளும், சிறு குட்டைகளும் தான் உதவி வருகின்றன. இங்கு அனுமதியின்றி சிலர் மண் எடுக்க முயற்சித்துள்ளனர். ஏரியில் மண் அள்ளப்படுவதால் விவசாயமும், கால்நடைகளும் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இங்கு எடுக்கப்படும் மண் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த போவதாக கூறுகிறார்கள். ஆனால் இங்குள்ள தொழிற்சாலைகளில் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் மண் அள்ளக்கூடாது என கூறுகிறார்கள் தொழிற்சாலைகள் நம் பகுதிக்கு வரவேண்டும் என்பது அவசியம் தான் என்ற போதிலும் இப்பகுதி மக்களுக்கு வேலை தருவதில்லை என்று கூறப்படும்போது இப்பகுதி மக்கள் மண் எடுக்க கூடாது என கூறுவதில் நியாயம் இருக்கிறது. இது தொடர்பாக கலெக்டரிடம் பேச இருக்கிறேன்.
அரசு அனுமதியின்றி மண் அள்ளப்பட்டால் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும். எடப்பாடி அரசின் ஒரு வருட ஆட்சியில் பல அவலங்களும், தோல்விகளும் தான் உள்ளது.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்று நாங்கள் (தி.மு.க.) கேட்டு வருகிறோம். ஆட்சியாளர்கள் இதைப்பற்றி கவலைப்படாமல் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படவில்லை. எனவே அரசு இதில் தலையிட்டு இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அக்ராவரம் முருகன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், வாலாஜா ஒன்றிய விவசாய சங்க தலைவருமான அக்ராவரம் பாஸ்கர், காட்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணன் மற்றும் கிராம மக்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக அங்கு வந்த வாலாஜா தாசில்தார் விஜயகுமாரிடம் ஏரியில் மண் எடுப்பது குறித்தும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா எனவும் துரைமுருகன் கேட்டறிந்தார்.