திருவண்ணாமலை இலங்கை அகதிகள் முகாமில் மாவட்ட நீதிபதி திடீர் ஆய்வு
திருவண்ணாமலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை காஞ்சி சாலையில் கிரிவலப்பாதையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 55 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
முகாமில் வசிப்பவர்களுக்கு அரசு உதவிகள் மற்றும் உதவித்தொகைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட நீதிபதி மகிழேந்தி, முகாமில் உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது முகாமில் உள்ள அகதிகள் கூறியதாவது:-
சில மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள குடும்பங்களுக்கு கியாஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. எங்கள் முகாமில் உள்ளவர்களுக்கும் கியாஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். எங்களுக்கு சாத்தனூர் அணை தண்ணீர் இணைப்பு வழங்க வேண்டும். முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை
எங்கள் முகாமில் உள்ளவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்து உள்ளோம். எங்களுக்கு அரசு வேலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆதார் அட்டை உள்ளது. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை இல்லை. வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு பதிலளித்து மாவட்ட நீதிபதி கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை வழங்கியபின் அரசியல்வாதிகள் அனைவரும் உங்களை தேடி வருவார்கள். நீதிமன்றங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு உதவிகள் எதுவும் கிடைக்காமல் இருந்தால் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் கடிதம் எழுதி கொடுத்தால், அரசு உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தங்கள் கோரிக்கைகள் குறித்து எழுத்துபூர்வமாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் எழுதி கொடுக்கும்படி மாவட்ட நீதிபதி கூறினார்.