கோவில்பட்டி அருகே பஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்; 2 மாணவர்கள் பலி
கோவில்பட்டி அருகே பஸ்–மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே பஸ்–மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கல்லூரி மாணவர்கள்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள நடுவிற்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராஜகுரு (வயது 20). ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சேதுராஜபுரத்தைச் சேர்ந்தவர் மற்றொரு முருகன் மகன் சேது முனீஸ் (21). இவர்கள் 2 பேரும் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இறுதி ஆண்டு படித்து வந்தனர்.
சேது முனீஸ், கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி மறவர் காலனியில் உள்ள தன்னுடைய சித்தி முருகலட்சுமியின் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று மாலையில் கல்லூரி முடிந்ததும், ராஜகுரு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவர் சேது முனீசையும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
பஸ்– மோட்டார் சைக்கிள் மோதல்
கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் நாற்கர சாலை சர்வீஸ் ரோட்டின் அருகில் பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு சென்று ராஜகுரு மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை நிரப்பினார். பின்னர் அவர் சேது முனீசுடன் மோட்டார் சைக்கிளில் சர்வீஸ் ரோட்டில் வலதுபுறமாக மெதுவாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோவில்பட்டியில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றி வந்த பஸ்சும், அந்த சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. சாலைப்புதூர் பெத்தேல் விடுதி அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த பஸ்சும், மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக் கொண்டன.
2 மாணவர்கள் பலி
இந்த கோர விபத்தில் பஸ்சின் அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய ராஜகுரு, சேது முனீஸ் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளின் மீது மோதிய வேகத்தில் நாற்கர சாலை தடுப்பு சுவரில் ஏறிய பஸ் சாய்ந்து நின்றது. உடனே பஸ் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மேற்கு இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த ராஜகுரு, சேது முனீஸ் ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு விபத்து
இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் சில நிமிடங்களில் மற்றொரு விபத்து நிகழ்ந்தது. அதன் விவரம் வருமாறு:–
கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் யோகேஷ் (21). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலையில் கல்லூரி முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த யோகேசுக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்துகள் குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான ராஜகுரு, சேது முனீஸ் மற்றும் மற்றொரு விபத்தில் படுகாயம் அடைந்த யோகேஷ் ஆகிய 3 மாணவர்களும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். மாணவர்கள் மீது மோதிய பஸ்கள் வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.