போத்தனூர் பகுதியில் பெண்களிடம் நகைபறித்த வாலிபர்கள் யார்?
பெண்களிடம் நகைபறித்த வாலிபர்கள் யார்? என்று கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சியை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை வெள்ளலூர் அருகே உள்ள வெள்ளாளப்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவருடைய மனைவி சுப்புலட்சுமி(வயது56). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து தன்னுடைய பேரனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சுப்புலட்சுமியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் போத்தனூர், சுந்தராபுரம், ராமநாதபுரம் பகுதிகளில் மட்டும் கடந்த 20 நாட்களில் 5 பெண்களிடம் நகைபறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதுகுறித்து போலீசார் விசாரித்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் துணிகரமாக பெண்களிடம் நகையை பறித்துச்சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நகைபறிப்பு குற்றங்கள் நடைபெற்ற பகுதிகளில் வணிகவளாகங்கள் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர்.
இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 வாலிபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த காட்சிகளை, நகையை பறிகொடுத்த பெண்களிடம் காட்டியபோது அந்த வாலிபர்கள் தான் நகையை பறித்துச்சென்றதாக கூறினார்கள்.
முகவரி கேட்பதுபோல் பேச்சுகொடுத்து பெண்களிடம் நகையை பறித்துச்செல்வது இந்த கொள்ளையர்களின் வாடிக்கை என தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் ஹெல்மெட் அணியவில்லை.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள வாலிபர்கள் யார்? வடமாநிலங்களை சேர்ந்தவர்களா? எனபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வாலிபரின் புகைப்படங்களை கோவை நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வாகனசோதனை நடத்தப்பட்டு வருகிறது.