வாலிபரை கடத்திய வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது

வேதாரண்யம் அருகே வாலிபரை கடத்திய வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-15 22:15 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே தேத்தாகுடி கிராமத்தை சேர்ந்தவர் எழிலரசன் (வயது30). இவர் மலேசியாவில் வேலைபார்த்து வந்தார். அப்போது அங்கு இருந்த சிலரிடம் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் எழிலரசன் சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் அவர் தென்னம்புலம் கிராமத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் எழிலரசனை வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த சிலர் காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவரை தோப்புத்துறையில் இறங்கி விட்டு சென்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதில் தொடர்புடையவர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த கலுவன் (27), செந்தில் என்கிற இளவரசன் (28), ராஜா என்கிற வீரமுருகன் (30) ஆகிய 3 பேரையும் கைதுசெய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். 

மேலும் செய்திகள்