கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும்
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் நடைபெற்று வரும் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என நேற்று நாமக்கல்லில் நடந்த தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்,
தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய மாநில அளவில் டெண்டர் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது.
இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாள்ஒன்றுக்கு ரூ.2 கோடி வீதம் இதுவரை ரூ.8 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் சுமார் 10 ஆயிரம் டிரைவர், கிளனர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கிடையே சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் எரிவாயுவை நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டு) கியாஸ் கொண்டு செல்லும் பணி கடந்த 4 நாட்களாக தடைப்பட்டு உள்ளது. இதனால் பாட்லிங் பிளாண்டுகளில் ஓரிரு நாட்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது எண்ணெய் நிறுவன அதிகாரிகள், லாரி உரிமையாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்கவில்லை. எனவே அதில் முடிவு எட்டப்படவில்லை. இருப்பினும் ஏற்றுக்கொண்ட ஒருசில கோரிக்கைகளை சங்க உறுப்பினர்களிடம் எடுத்துக் கூறி அடுத்தக்கட்ட முடிவு மேற்கொள்ளப்படும் என சங்க நிர்வாகிகள் கூறி இருந்தனர். இதன் காரணமாக வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று உறுப்பினர்களின் கருத்தை கேட்டறியும் வகையில் நாமக்கல்லில் தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்து, மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
இருப்பினும் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடருவது என கருத்து தெரிவித்தனர். மேலும் சிலர் மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டபடி திருத்தம் செய்யப்பட்ட நிபந்தனைகளை நாளை (இன்று) எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட உள்ளன. அதை பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் எனவும் கூறினர்.
எனவே தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் நடைபெற்று வரும் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் அறிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மண்டல வாரியான டெண்டர் என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே அதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என பேச்சுவார்த்தையின் போது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் விபத்தில் சிக்கும் வாகனங்களின் டிரைவர்களுக்கு அளிக்கப்படும் கடுமையான தண்டனையை குறைப்பது, முன்வைப்பு தொகை செலுத்துவதில் சலுகை என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர்.
இருப்பினும் வாகனங்களே இல்லாத நபர்கள் ரூ.1 லட்சம் டெபாசிட் செலுத்தி டெண்டரில் பங்கேற்கலாம், 18 டன் கொள்ளளவு மற்றும் 21 டன் கொள்ளளவு கொண்ட வாகனங்களுக்கு வாடகை வித்தியாசம் இருக்கும் என்பது போன்ற நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இவற்றில் நாங்கள் கூறிய சில கருத்துகளை ஏற்றுக்கொண்டு, திருத்தப்பட்ட நிபந்தனைகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வெளியிடுவதாக தெரிவித்து உள்ளனர். அவர்கள் வெளியிட்ட பிறகு, அதை பார்த்து அடுத்தக்கட்ட முடிவை எடுப்போம். அதுவரை எங்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும். வேலைநிறுத்தம் நீடிக்கும் பட்சத்தில் இதர மண்டலங்களில் உள்ள வாகனங்களை இங்கு இயக்க அனுமதிக்க மாட்டோம்.
கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நீடித்து வருவதால், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் இன்னும் ஓரிரு நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.