மார்த்தாண்டத்தில் 2 இடங்களில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க மண் ஆய்வு

மார்த்தாண்டம் பகுதியில் 2 இடங்களில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க மண் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.

Update: 2018-02-15 22:45 GMT
குழித்துறை,

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் பல்வேறு வேலைகள் நிமித்தம் திருவனந்தபுரத்திற்கு சென்று வருகிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

நாகர்கோவில்– திருவனந்தபுரம் பாதையில் தினமும் ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் மார்த்தாண்டம் –ஐரேனிபுரம் சாலையில் உள்ள குழித்துறை ரெயில்நிலைய கேட் அடிக்கடி பூட்டப்படுகிறது.

அதேபோல் மார்த்தாண்டம்–கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டும் அடிக்கடி பூட்டப்படுகிறது. இதன்காரணமாக இந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

எனவே இந்த பகுதிகளில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் மார்த்தாண்டம்–ஐரேனிபுரம் மற்றும் மார்த்தாண்டம்– கருங்கல் சாலைகளில் உள்ள ரெயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலம் அமைப்பதற்கான        முதல் கட்ட மண் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்