ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஆசிரியையிடம் ரூ.14 ஆயிரம் திருட்டு
குளச்சலில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் ரூ.14 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குளச்சல்,
குமரி மாவட்டம் குளச்சல் இரும்பிலி பகுதியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 68), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர் நேற்று காலை குளச்சல் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக தனியாக சென்றார். அப்போது, அங்கு சுமார் 20 வயதுடைய வாலிபர் நின்று கொண்டிருந்தார். அந்த வாலிபர் கல்யாணியிடம், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க தான் உதவுவதாக கூறினார்.
இதை நம்பிய கல்யாணியும் அந்த வாலிபரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். அந்த வாலிபர், கல்யாணியிடம் இருந்து ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.14 ஆயிரத்தை எடுத்தார். பின்னர், ஏ.டி.எம். கார்டை கல்யாணியிடம் கொடுத்தார்.
தப்பி ஓட்டம்
ஆனால் பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்த கல்யாணி, கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் மாயமாகிவிட்டார்.
இந்த நூதன திருட்டு குறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அந்த வாலிபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.