நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கு கோர்ட்டில் விசாரணை தொடங்கியது நடிகர் சூரஜ் பஞ்சோலி ஆஜர்

நடிகை ஜியாகான் தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நேற்று தொடங்கியது. நடிகர் சூரஜ் பஞ்சோலி ஆஜரானார்.

Update: 2018-02-14 23:00 GMT
மும்பை,

நடிகை ஜியாகான் தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நேற்று தொடங்கியது. நடிகர் சூரஜ் பஞ்சோலி ஆஜரானார்.

நடிகை தற்கொலை

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘நிஷப்த்’ என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகி புகழ்பெற்றவர் நடிகை ஜியாகான். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் இந்தி திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜியாகானின் தாய் ரபியா கான் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், தனது மகள் ஜியாகானும், நடிகருமான சூரஜ் பஞ்சோலியும் காதலித்து வந்ததாகவும், பின்னர் அவர் கொடுத்த மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களே ஜியாகானை தற்கொலைக்கு தூண்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணை தொடங்கியது

இவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு குறித்த விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நேற்று தொடங்கியது. விசாரணையின்போது, நடிகர் சூரஜ் பஞ்சோலி கோர்ட்டில் ஆஜரானார்.

மேலும் செய்திகள்