காதலுக்கு எதிர்ப்பு-இளம்பெண்ணை வெளியே விட பெற்றோர் மறுப்பு கத்தியால் மார்பில் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலை முயற்சி
பல்லாரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இளம்பெண்ணை வெளியே விட பெற்றோர் மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியால் தனது மார்பில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
பெங்களூரு,
பல்லாரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இளம்பெண்ணை வெளியே விட பெற்றோர் மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியால் தனது மார்பில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். காதலி வீட்டின் அருகே காதலர் தினத்தன்று நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு
பல்லாரி மாவட்டம் ஹகரி பொம்மனஹள்ளியை சேர்ந்தவர் வீரேஷ் (வயது 27). இவர், ஒசப்பேட்டே பகுதியில் உடற்பயிற்சி மையம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், ஒசப்பேட்டேயை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் 2 ஆண்டுக்கு முன்பு காதல் மலர்ந்தது. வீரேசும், இளம்பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். ஆனால் 2 பேரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில், வீரேசை இளம்பெண் காதலிப்பது, அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.
வீரேஷ் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், அவருடனான காதலை கைவிடும்படி கூறியதுடன், இந்த காதலுக்கும் இளம்பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வீரேசுக்கு, இளம்பெண்ணை திருமணம் செய்து கொடுக்கவும், அவர்கள் மறுத்து விட்டனர். ஆனாலும் வீரேசும், இளம்பெண்ணும் தங்களது காதலை தொடர்ந்தனர்.
தற்கொலை முயற்சி
இந்த நிலையில், நேற்று காதலர் தினம் என்பதால் தனது காதலியான இளம்பெண்ணை, வீரேஷ் பார்க்க விரும்பினார். ஆனால் இளம்பெண்ணை வீட்டை விட்டு வெளியே செல்ல, அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக மனம் உடைந்த வீரேஷ் நேற்று மதியம் தனது காதலியின் வீட்டிற்கு சென்றார். பின்னர் காதலியின் வீட்டு அருகே வைத்து திடீரென்று தனது மார்பில் கத்தியால் குத்திக் கொண்ட வீரேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
உடனே அவரை, அங்கிருந்த நண்பர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீரேசின் உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒசப்பேட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர் தினத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒசப்பேட்டேயில் நேற்று பர பரப்பை ஏற்படுத்தியது.