அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தினர் பிரசாரம்

முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டையில் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தினர் பிரசாரம் செய்தனர்.

Update: 2018-02-14 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் நேற்றுகாலை பிரசாரம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். பிரசாரத்தை சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.

பிரசாரத்தில், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணி புரிந்த ஊழியர்களுக்கு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் கல்வி தகுதி அடிப்படையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் விற்பனையை முறைப்படுத்திட, கடைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கணினிமயமாக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை நிலுவையுடன் தொடர்ந்து வழங்க வேண்டும். கடைகளில் சராசரி விற்பனை மற்றும் பணி மூப்பு அடிப்படையில் சுழற்சி முறையிலான பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கும்பகோணம்

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜெயபால், துணைச் செயலாளர் அன்பு, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல தஞ்சை ரெயிலடி, தொம்பன்குடிசை, கீழவாசல் மற்றும் கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்