கர்நாடக சட்டசபையில் 2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் சித்தராமையா நாளை தாக்கல் செய்கிறார்
கர்நாடக சட்டசபையில் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்த ராமையா நாளை(வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்கிறார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்த ராமையா நாளை(வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்கிறார். தேர்தல் நெருங்குவதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
கர்நாடக சட்டசபையின் கூட்டத்தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கி 9-ந் தேதி வரை நடைபெற்றது.
கர்நாடக பட்ஜெட்
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் முதல் நாளில் சட்டசபை மற்றும் மேல்-சபையின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் சட்டசபை 16-ந் தேதிக்கு(அதாவது நாளை) ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை நாளை(வெள்ளிக்கிழமை) மீண்டும் கூடுகிறது. அப்போது, ஏற்கனவே அறிவித்தப்படி நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா 2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நண்பகல் 12.30 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது சித்தராமையா தாக்கல் செய்யும் 13-வது பட்ஜெட் ஆகும். சித்தராமையா முதல்-மந்திரியாக இருக்கும்போது தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இதுவாகும்.
கவர்ச்சிகரமான அறிவிப்புகள்
இன்னும் சில மாதங்களில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களை ஈர்க்கும் வகையில் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வரிகள் இருக்காது. மக்களை பாதிக்கும் வகையில் எந்த அம்சங்களும் இதில் இடம் பெற வாய்ப்பு இல்லை. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள், தற்போது உள்ள அரசால் நிறைவேற்ற முடியாது. அத்துடன் புதிய சலுகைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.
தேர்தலுக்கு பிறகு புதிதாக அமையும் அரசு தான் அதை நிறைவேற்றும். ஒருவேளை வேறு கட்சியின் ஆட்சி அமைந்தால், இந்த பட்ஜெட்டை ரத்து செய்துவிட்டு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும். மீண்டும் காங்கிரஸ் ஆட்சியே தொடர்ந்தால் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுவது உறுதியாகும். முக்கியமாக 5 ஆண்டு கால ஆட்சியில் இது கர்நாடக காங்கிரஸ் அரசின் கடைசி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.