சர்க்கரை ஆலை முன்பு 5 நாட்களாக போராட்டம்: கரும்பு விவசாயிகளிடம் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி
சர்க்கரை ஆலை முன்பு 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளிடம் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே ஆலத்துகோம்பையில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு அரசு அறிவித்த கரும்புக்கு ஒரு டன் விலையான ரூ.1,325-யை இந்த ஆலை நிர்வாகம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதன் முன்பு விவசாயிகள் 5 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த போராட்டம் நேற்று 6-வது நாளாகவும் தொடர்ந்தது.
இதற்கிடையே கரும்பு விவசாயிகள், வருவாய்த்துறை தரப்பில் இருந்து முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு நேற்று முன்தினம் அழைக்கப்பட்டார்கள். இந்த பேச்சுவார்த்தையில் கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ், சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நெப்போலியன், ஆலை நிர்வாக பொது மேலாளர் கந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சத்தியமங்கலம் துணைத்தலைவர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 11 மணி வரை நீடித்தது. அப்போது ஆர்.டி.ஓ.கோவிந்தராஜ் கூறும்போது, ‘ஆலை நிர்வாகிகள் கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ.130-க்கு மேல் தர இயலாது. இதுசம்பந்தமாக விவசாயிகளிடம் இருந்து கையெழுத்து பெற்ற மனுவும் திரும்பி தரமாட்டாது. எனவே விவசாயிகள் கோர்ட்டு மூலமாக பிரச்சினையை தீர்த்து கொள்ளுங்கள்’ என்றார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரை சந்திப்போம்.’ என்றனர்.