அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியை புறக்கணித்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-14 21:45 GMT
அந்தியூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 9-ந் தேதி செவிலியர் மணிமாலா என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணமான 2 டாக்டர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு செவிலியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருப்பு பட்டை அணிந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் பவானி அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். 

மேலும் செய்திகள்