மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; செவிலியர் பலி
வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலாஜா,
வாலாஜா தாலுகா, வாணாபாடி கிராமம் தோப்பு தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் பொன்னியம்மாள் (வயது 25), சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று பொன்னியம்மாள் ராணிப்பேட்டை மாந்தாங்கல் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி சென்றார்.
வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராம தேசிய நெடுஞ்சாலையில் முசிறி சாலை சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த பொன்னியம்மாள் தலை மீது லாரி ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விஜயன் எந்தவித காயமின்றி உயிர்தப்பினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.