காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது
வேலூர் கோட்டையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்கள் கொடுத்து மகிழ்ந்தனர். சிலர் தங்கள் காதலிக்கு ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். காதலர் தினத்தை கொண்டாட காதலர்கள் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். அங்கு தங்கள் காதல் மற்றும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
வேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான காதல் ஜோடியினர் வேலூர் கோட்டைக்கு நேற்று காலை முதல் வரத்தொடங்கினர். அவர்கள் கோட்டையின் பல்வேறு பகுதிகளில் அமர்ந்து காதலர் தினத்தை கொண்டாடினர்.
காதலர் தின கொண்டாட்டத்துக்கு இந்து முன்னணி உள்பட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. காதலர் தினம் தமிழக பண்பாட்டுக்கு எதிரானது என்றும், காதலர் தினத்தன்று பொது இடங்களில் அத்துமீறி நடக்கும் காதல் ஜோடிக்கு அதே இடத்தில் இலவச திருமணம் செய்து வைக்கப்படும் என இந்து முன்னணியினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி, காதலர் தினமான நேற்று இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் நிர்வாகிகள் 15-க்கும் மேற்பட்டோர் தாலிக்கயிறு மற்றும் மாலையுடன் கோட்டைக்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் கோட்டையில் இருந்து சில காதலர்கள் ஓட்டம் பிடித்தனர். கோட்டை கொத்தளத்தில் காதல் ஜோடிகள் உள்ளார்களா? என இந்து முன்னணியினர் பார்க்க சென்றனர். அப்போது திடீரென அவர்கள் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். கோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்ய எவ்வித அனுமதியும் பெறாமல் எப்படி கோஷங்கள் எழுப்பலாம்? என போலீசார் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து இந்து முன்னணியினர் போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் முள்ளிப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இந்து முன்னணியினரை போலீசார் அடைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோட்டையில் போலீசார் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் வேலூர் கோட்டைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கோட்டை காந்தி சிலை முன்பு இரும்பு கம்பிகளால் (பேரிகார்டு) தடுப்புகள் அமைக்கப்பட்டது.
பின்னர் கோட்டைக்கு ஜோடியாக வந்தவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தாலி, மெட்டி அணிந்து வந்த பெண்களை மட்டுமே போலீசார் அனுமதித்தனர். திருமணம் ஆகாத காதல் ஜோடிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசாரின் கெடுபிடி காரணமாக கோட்டையில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக இருந்தது.
காதலர் தினத்தை கோட்டையில் கொண்டாட வந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட காதல் ஜோடிகள் அருகேயுள்ள பெரியார் பூங்காவிற்கு சென்றனர். ஆனால் பராமரிப்பு பணி காரணமாக பெரியார் பூங்கா நேற்று மூடப்பட்டு இருந்தது. இதனால் காதல் ஜோடியினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.