சட்டசபை கூட்டத்தில் மைக் வைத்து பேசிய விவகாரம்; அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. வருத்தம் தெரிவித்தார்
சட்டசபை கூட்டத்தில் மைக் வைத்து பேசிய விவகாரம் குறித்து உரிமை மீறல் குழுவிடம் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ. வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தார்.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பு முறைகேடு தொடர்பாக என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்து, என்.எஸ்.ஜெ.ஜெயபால் ஆகியோர் பேசினர். தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியில் இருந்து சிறிய ஒலிபெருக்கியுடன் கூடிய மைக்கை எடுத்து வந்து சட்டசபையில் அவர்கள் பேசினர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சபாநாயகர் வைத்திலிங்கம் அவர்கள் இருவரையும், ஒருநாள் முழுவதும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்து, என்.எஸ்.ஜெ.ஜெயபால் ஆகியோர் மீது சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உரிமை மீறல் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து சட்டமன்ற உரிமை மீறல் குழு விசாரணை நடத்தியது. துணை சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையிலான உரிமை மீறல் குழு நோட்டீசு அனுப்பியது. இதில் என்.எஸ்.ஜெ.ஜெயபால் சபையில் நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் நேரடியாக தொடர்பு கிடையாது என்று வருத்தம் தெரிவிப்பதாகவும் கடிதம் அனுப்பினார்.
ஆனால் அசோக் ஆனந்து எம்.எல்.ஏ., தனக்கு ஏற்கனவே சபாநாயகர் வைத்திலிங்கம் ஒரு நாள் சஸ்பெண்டு செய்து தண்டனை அளித்து விட்டார். எனவே இந்த உரிமை மீறல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் நான் விளக்கம் அளிக்க தேவை இல்லை என்று கூறி கடிதம் அளித்து இருந்தார். இதில் என்.எஸ்.ஜெ. ஜெயபாலின் கடிதத்தை உரிமை மீறல் குழு ஏற்றுக்கொண்டது.
ஆனால் அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 12.30 மணியளவில் எம்.எல்.ஏ.க்கள் ஆசோக் ஆனந்து, என்.எஸ்.ஜெ.ஜெயபால் ஆகியோர் சட்டசபைக்கு வந்தனர். உரிமை மீறல் குழுவிடம் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. கடிதம் கொடுத்தார்.
இது குறித்து துணை சபாநயாகர் சிவக்கொழுந்துவிடம் கேட்ட போது, ‘சட்டமன்ற உரிமை மீறல் குழு கேட்ட விளக்கத்திற்கு அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்துவிட்டு சென்றுள்ளார். அந்த கடிதம் உரிமை மீறல் குழுவிடம் வைத்து முடிவு செய்யப்படும்’ என்றார்.