கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.;

Update: 2018-02-14 22:15 GMT
நீடாமங்கலம்,

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் நீடாமங்கலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 ரூபாய் மற்றும் இதர படிகள் அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும். பணியிலிருந்து ஓய்வு பெறும் கிராம உதவியாளருக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் கடைசி மாதம் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக் கிழமை), நாளை (வெள்ளிக் கிழமை) ஆகிய 2 நாள் காத்திருப்பு போராட்டம் அனைத்து தாசில்தார் அலுவலகம் முன்பும் நடத்துவது. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன்பு காலமுறை ஊதியம் வழங்க கோரி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம உதவியாளர்களும் குடும்பத்துடன் பெருந்திரள் முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்